உடுமலை, செப். 29- கிராமப்புற தங்கல் திட்டத்தின் மூலம் விவ சாய பெருமக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துவது குறித்து பொங்கலூரில் வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. திருப்பூர் சுற்று வட்டா ரப் பகுதிகளில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கிரா மப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்காக பொங் கலூர் பகுதியில் புதியதாக நிறுவப்பட்ட வேளாண் அறிவியல் நிலையத்தை கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நீ.குமார் மற்றும் வேளாண் விரிவாக்கவியலின் இயக்குநர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அதில் துணை வேந்தர், வேளாண் அறிவியல் நிலையத்தின் ஒருங்கி ணைப்பாளர் மற்றும் முதல்வர் வேளாண்மை மாணவர்களுடன் சேர்ந்து மரங்களை நட்டனர். இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் ஆய்வறிக்கையை பார்வையிட்டதோடு, கிராமப்புறத் தங்கல் திட்டத்தின் மூலம் விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து துணை வேந்தல் ஆலோசனை வழங்கி னார்.