tamilnadu

img

வெளிநாடுகளுக்கு புதைவடத்தில் மின்சாரம் உள்ளூரில் மட்டும் உயர் மின்கோபுரமா? விவசாயிகள் கேள்வி

திருப்பூர், ஆக. 6 – ஆப்பிரிக்காவுக்கும், இலங்கைக் கும் உயர் அழுத்த மின்சாரத்தை கட லுக்கு அடியில் புதைவடமாகக் கொண்டு செல்லத் திட்டம் வகுக்கும் மத்திய அரசு, உள்ளூரில் மட்டும் விவ சாயிகளின் விளைநிலத்தில் உயர் மின் கோபுரம் மூலம் கொண்டு செல்வது நியாயமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் மூலம் விருதுநகர் முதல் காவுத்தம்பாளையம் வரை 765 கிலோ வாட் உயர் மின்னழுத்த மின்சாரத்தை உயர் மின் கோபுரம் வழியாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதனால் வழியெங்கும் ஏராளமான விவ சாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய விளைநிலத்தையும், வாழ்வா தாரத்தையும் இழக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரைச் சந் தித்து இந்தத் திட்டத்தை சாலையோரம் புதை வடம் மூலமாக நிறைவேற்ற வலி யுறுத்தி மனு கொடுக்கும் இயக் கத்தை நடத்தினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தமி ழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் வழக்கறிஞர் மு.ஈசன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஜி.கே.கேசவன் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் நிர் வாகிகள் பங்கேற்றனர். இத்துடன் விளைநிலங்கள் பாதிக்கப்படக்கூடிய தாராபுரம், காங்கேயம், ஊத்துக்குளி வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவ சாயிகளும் ஆட்சியரகம் வந்திருந் தனர். இவர்கள் அளித்த மனுவில், மத்திய அரசு வெளிநாடுகளுக்குக் கடல் கடந்து புதை வடம் வழியாக உயரழுத்த மின் சாரத்தைக் கொண்டு செல்லும் திட் டத்தை அமல்படுத்துகிறது. ஆனால் உள்ளூரில் விவசாயிகளின் வாழ்வா தாரத்தைப் பறிக்கும் திட்டத்தை அமல் படுத்துவது நியாயமா எனக் கேள்வி எழுப்பியதுடன், சாலையோரம் புதை வடம் மூலம் உயரழுத்த மின்சாரத்தைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்று திட்டத்தை யும் வலியுறுத்தினர். திருப்பூர் கோட்டாட்சியர் நேரடி யாக விவசாயிகளிடம் வந்து மொத்தம் 280 மனுக்களைப் பெற்றுக் கொண் டார். இதைத் தொடர்ந்து விவசாயி கள் சங்கப் பிரதிநிதிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விவசாயிகளின் நியாயமான கோரிக் கையைப் பரிசீலித்து சரியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற் புறுத்தினர்.