திருப்பூர், மார்ச் 1 – திருப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு 81ஆண் டுகள் வலுவான நிலையில் இருந்த, மக்களுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்தான் இந்த அலங்கோலம் அரங்கேற்றப்பட்டது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் தாராபுரம் ரோடு சந்திப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகம் உள்ளது. இங்கு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இரண்டு குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை குடிநீர் தேக்கத் தொட்டி, பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்தில் 1939ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போ தைய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜன் என்பவரால் திறக்கப்பட்ட இந்த மேல்நிலைத் தொட்டிமூலம் தான் முதலாவது குடிநீர் திட்டக் குடிநீர், முதல்முறையாக திருப்பூர் நகராட்சியில் விநியோகம் செய்யப் பட்டது. திருப்பூர் கோவில்வழி பகுதியில் நீரேற்று நிலையம் (பம்ப் ஹவுஸ்) அமைக்கப்பட்டு, ஜெர்மனி இருந்து இரும்பு பைப்புகள் அமைக்கப்பட்டு, இந்த தொட்டியில் நீரேற்றம் செய்யப் பட்டது. அதுவரை திருப்பூரில் கிணற்று தண்ணீரும், நொய்யல் ஆற்றின் தண்ணீரும்தான் குடிநீர் ஆதாரமாக இருந்தது. இந்த தொட்டி கட்டப்பட்ட பின்புதான் திருப்பூர் மக்களுக்கு குடிநீர் விநியோகம் சராசரியான கால அளவில் கிடைக்கத் தொடங்கியது. மேலும் நகரில் குழாய் இல்லாத பல பகுதிகளுக்கு இந்த தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்து சென்று இன்றளவும் லாரி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த தொட்டியில் நீர்க் கசிவு, தொட்டியின் கட்டுமானத்தில் விரிசல் போன்ற எந்த பெரிய பிரச்ச னையும் இல்லாமல் வலுவாகவே இதுவரை இருந்தது. இப்படி திருப்பூர் மக்களுக்கு 81 ஆண்டுகளாக பயன் பட்டு வந்த இந்த தொட்டி, கடந்த வாரம் வரை பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் திருப்பூருக்கு நான்கா வது குடிநீர்த் திட்டத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டு வதற்கு, இந்த தொட்டி உள்ள பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் தேர்வு செய்தனர். இந்த பழமை வாய்ந்த குடிநீர் தொட்டியை இடிக்க வும் முடிவு செய்தனர். இதன்படி கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு இத்தொட்டியை இடிக் கும் பணி தொடங்கியது. சுமார் 70 அடி உயரம் இருந்த இந்த தொட்டியை இடிக்க, பிரம்மாண்ட ஹிட்டாச்சி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்றது. அக்காலத்தில் கரும்புச் சக்கை, சுண்ணாம்பு, முட்டை போன்றவற்றை பயன்படுத்தி கட்டபட்டு இருந்ததால் இந்த தொட்டி மிக வலுவாக இருந் தது. பல மணி நேரம் கடும் முயற்சிக் குப் பிறகே இயந்திரங்கள் மூலம் பழ மையான இந்த தொட்டி இடிக்கப் பட்டது. இது குறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், “முதலாவது குடிநீர் திட்டத்துக்கு என கட்டப்பட்ட இந்த தொட்டி 81 ஆண்டுகள் முழுமையான பயன்பாட் டில் இருந்தது. இதிலிருந்து சிறு கசிவு கூட ஏற்பட்டதில்லை. இன்னும் பல ஆண்டுகள் இந்த தொட்டி நல்ல நிலை யில் தான் இருக்கும். ஆனாலும் இந்த இடத்தில் இதைவிட மூன்று மடங்கு பெரிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டியது அவசியம் ஏற்பட்டுள் ளதால், இத்தொட்டியை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, என்றார். அதேசமயம் முக்கால் நூற்றாண் டைக் கடந்து வலுவாக நம் தொன் மையான கட்டுமான கலைக்குச் சான்றாகத் திகழ்ந்த இந்த கட்டுமா னத்தை, பயன்பாட்டு நோக்கத்தில் மட்டும் இடித்திருப்பது சரியல்ல. இது ஒரு குடிநீர் தொட்டியின் மறைவு மட்டுமல்ல, ஒரு பழைய வரலாறும் இடிபாடுகளில் மறைந்து அழிகிறது என்ற வேதனை ஏற்படுகிறது என வீரராசேந்திரன் தொல்லியல் வர லாற்று ஆய்வு மைய இயக்குநர் பொறி யாளர் சு.ரவிக்குமார் கூறினார்.