அவிநாசி, அக்.17- அவிநாசி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் முறிந்து சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு இழப் பீடு அறிவிக்காததால் விவசாயி கள் வேதனையடைந்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், முறியாண் டம்பாளையம், ஆலத்தூர், வடுக பாளையம், பாப்பாங்குளம், மங்கரசு வலையபாளையம், பொங் கலூர், தண்டுக்காரன்பாளையம் மற்றும் கானூர் ஆகிய கிராமங்க ளில் உள்ள விவசாயிகள் தோட் டத்தில் வாழை மரங்கள் குழை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், கடந்த திங்களன்று சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம டைந்தன. இதுகுறித்து தகவல றிந்த வருவாய்த்துறையினர் சேத மடைந்த வாழை மரங்களை கணக்கெடுத்துச் சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:- வாழை கன்று நடு வதற்கு முன்பு உழவு செய்யவேண் டும். ஒரு கன்று ரூ.40 முதல் ரூ.50 க்கு வாங்குகிறோம். அதனைக் கொண்டு வருவதற்கு ஒரு கன் றுக்கு ரூ.10 செலவு ஆகிறது. உழ வுக்கு பின் கன்று நடுவதற்கு ரூ.10 கூலி என மொத்தம் 70 ரூபாய் செலவு ஆகிறது. இதன் பின் 15 மாத காலங்களில் உரம், பூச்சி மருந்து செலவுகள் உள்ளன. இவ்வாறு விளைந்த வாழைகள் அறுவடைக்கு வர ஒரு வருடமாகும். இந்த ஒரு வரு டத்திற்கு எங்களது உழைப்புக்குக் கூலி என்று பார்க்கும் போது ஒரு வாழை மரத்திற்கு ரூ.150 வரை செலவு ஆகிறது. ஒரு ஏக்கரில் ஆயி ரம் வாழைகள் நடுகிறோம். இந் நிலையில் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது. இது மட்டுமின்றி வாழைக் கன்று நட்டவுடன், வங்கியில் குறைந்த வட்டியில் வாழை சாகுபடிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பயிர் கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கும் போதே ஒரு ஏக்கர் வாழைக்கு ரூ.5 ஆயிரம் இன்சூரன்ஸ் கட்டி விடுகிறோம். இந்த கடனை 15 மாதங்களில் வாழை அறுவடை செய்தவுடன், வங்கியில் செலுத்த வேண்டும். ஆனால் சூறாவளி காற் றால் வாழைகள் சாய்ந்து விடுவ தால் வங்கி கடனை கட்ட முடிவ தில்லை. காப்பீடு செய்தும், எங்க ளுக்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. மேலும், கடந்த 8 வருடங் களாக சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணி மட்டுமே நடக்கி றது. எந்த வித உதவியும் கிடைக்க வில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் தற்போது சேத மடைந்துள்ள வாழை மரங்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரி வித்தனர்.