திருப்பூர், செப். 29 – ஊத்துக்குளியில் நவீன உடற் பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் அமைத்துத் தரும் படி தமிழக அரசுக்கு இந்திய மாண வர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. ஊத்துக்குளி சங்க அலுவலகத் தில் ஞாயிறன்று நடைபெற்ற இம்மாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ம.இந்துமதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப் பினர் ப.பிரசாந்த் வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் ச.ஜோ திபாசு அஞ்சலி தீர்மானம் முன் மொழிந்தார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் முகிலன் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டத் துணைச் செயலாளர் கு.பாலமுரளி அறிக்கை சமர்ப்பித்தார். இம்மாநாட்டில், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேனிலைப் பள் ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்து வசதியை அதிகப்படுத்த வேண் டும், ஊத்துக்குளி தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட மொரட்டுப்பாளையம், பல்லக வுண்டம்பாளையம் மற்றும் வெள் ளரவெளி பள்ளிகளில் கூடுதல் பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப் பட்ட மாணவர்களிடம தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், மாணவர்கள், இளைஞர்கள் பயனடையும் வகையில் நவீன வசதிகளுடன் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும், அர சுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரி யர் கழக தேர்தல்களை உடன டியாக நடத்த வேண்டும், புதி தாக கட்டப்பட்ட செங்கப்பள்ளி, அரும்பாளையம், பெரியபாளை யம் பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஊத்துக்குளி தாலுகா தலை வராக பிரசாந்த், செயலாளராக கு.பாலமுரளி, துணைத் தலைவ ராக இந்துமதி, ஜோதிபாசு, துணை செயலாளர்களாக கோகிலபாரதி, மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 15 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் வாலிபர் சங்க தாலுகா செயலாளர் க.லெனின், மாதர் சங்க தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, வாலிபர் சங்க முன் னாள் மாவட்டத் துணைத் தலை வர் கை.குழந்தைசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாவட் டச் செயலாளர் சம்சீர் அகமது உரையாற்றினார். ஊத்துக்குளி தாலுகாவில் திரளான மாணவர் கள் கலந்து கொண்டனர்.