tamilnadu

இரவு நேர வண்டி கடைகளுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பு

திருப்பூர், பிப்.13 – திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டு பூண்டி ரிங் ரோடு செட்டிபாளையம் செல் லும் புதுப்பாலம் அருகே இரவு நேர வண்டி கடைகளுக்கு விஷமிகள் தீ வைத்தனர். திருமுருகன் பூண்டி முதல் பூலுவபட்டி செல்லும் ரிங் ரோட்டில் செட்டிபாளையம் புதுப் பாலம் அருகில் இரவுநேர வண்டி கடை மற்றும் டிபன் கடைகள் செயல்பட்டு வந்தன. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் இரவு டிபன் கடை வைத்து நடத்தி வருகின்றார்.  இந்நிலையில் வியாழக்கிழமை அதி காலை நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லா தபோது, இந்த கடைகளுக்கு சமூக விரோ திகள் தீ வைத்துள்ளனர். இதில் டிபன் கடை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும்,  இந்த கடையில் இருந்த அடுப்பு, தோசை கல், புரோட்டா வீசும் மேஜை ஆகியவற்றையும் உடைத்து கீழே தள்ளிச் சென்றுள்ளனர். புதன்கிழமை இந்து முன்னணி பிர முகரின் கார் எரிக்கப்பட்டதைக் காரண மாகக்  கொண்டு நகரில் பேருந்துகள் மீது கல் வீச்சு, பேக்கரிகள் மீது கல் வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக செட்டிபாளையம் பாலம் பகுதியில் டிபன் கடைக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்த விஷமிகள் தீ வைத்திருக்கக்கூடும் என்று அப்பகுதியைச் சேர்ந்தோர் சந்தேகம் எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து வேலம்பா ளையம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.