tamilnadu

img

தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.... நெல்லையில் அறநிலைய துறை அமைச்சர் பேட்டி....

திருநெல்வேலி:
தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின்நோக்கம் என்றும் இந்து சமய அறநிலையத்துறையில் அனைத்து பணிகளும் குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  நெல்லையப்பர் காந்திமதி யம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை நெல்லை வந்த அவர் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, வசந்த மண்டபம், கோவில் உட்பிரகாரம், தெப்பக்குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள மிக தொன்மையான கோவில்களை துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறேன். இதுவரை 50 கோவில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள்குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் சிதிலமடைந்து திருப்பணிகள் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு பணிகள் மேற்கொள்ள தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இங்குள்ள  கருமாரி தெப்பம் முழுமையாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று நவக்கிரஹ சந்திரன்சிலை சிதிலமடைந்துள்ளது. அதனை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள்  செய்து கொடுக்கப்படும் .  நெல்லையப்பர் கோவிலில் உள்ள வெள்ளி தேர் புனரமைக்கப்பட்டு 2 ஆண்டு காலத்தில் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் யானை காந்திமதிக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இது இனி 15 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்றுவந்த மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சிகடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு அதிகமான கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படும் தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படவேண் டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆய்வின் போது தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்எல்ஏ, நெல்லை மாவட்டஆட்சியர் விஷ்ணு மற்றும் அரசு அதிகாரி கள் உட்பட பலர் உடனிருந்தனர்.