tamilnadu

img

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு எழுச்சியுடன் துவக்கம்

திருநெல்வேலி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலு வலர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநில மாநாடுதென்காசியில் எழுச்சியுடன் துவங்கியது.தென்காசி இசக்கி மகாலில் நடைபெறும் இந்த முதல் நாள் மாநாட்டிற்கு சங்க மாநிலத்
தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநாட்டு கொடி யேற்றப்பட்டது. தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் க.துரைசிங் வர வேற்றுப் பேசினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலபொதுச்செயலாளர் ந.சேகர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். 

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைஊழியர் சம்மேளன பொது செயலாளர் கே. ஆர்.கணேசன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.பார்த்திபன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பணி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் கென்னடி பூபாலராயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாநாட்டில் பெரணமல்லூர் சேகரன் எழுதிய முடிவல்ல ஆரம்பம் என்ற சிறுகதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. டி.என்.ஆர்.டி.பி.ஏ மாநிலத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி நூலை வெளியிட்டு பேசினார். தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு நடை பெற்றது. பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். மாநிலப் பொருளாளர் மா.விஜய பாஸ்கர் வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்துப் பேசினார். 

பாராட்டு
தொடர்ந்து மாலையில் பணி ஓய்வு பெற்ற மாநில நிர்வாகிகள் மற்றும் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  இதில் சங்க மாநில தலைவர், மு.சுப்பிரமணியன், மாநில துணை தலைவர் புஷ்பநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் ஆ.மணியன், எம்.முத்துராமன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.சனியன்று (27 ஆம் தேதி) 2 ஆவது நாள் மாநாடு நடைபெறுகிறது.  மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன, புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.