tamilnadu

img

சாலை பாதுகாப்பு சட்டத்தை கைவிட கோரிக்கை நெல்லையில் போக்குவரத்து சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஆக.25- சாலை பாதுகாப்பு சட்டத்தை கைவிட கோரி நெல்லையில் சிஐடியு அரசு போக்குவரத்து, ஆட்டோ, சாலை போக்குவரத்து சங்கம் சார் பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  மோட்டார் வாகன தொழிலை அழிக்க வரும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கைவிட வேண்டும், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, எப் சி மற்றும் வாகனம் பழுது பார்க்கும் உரிமை, உதிரி பாகம் விற்பனை போன்றவற்றை கார்ப்பரேட்முதலாளிகள் வசம் ஒப்படைக்கும் சட்ட திருத்த மசோ தாவை கைவிட வேண்டும், அநியாய இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, புதுப்பித்தல் கட்டணம், புதிய பதிவு, கட்டண உயர்வு போன்றவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ ஓட்டு நர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும், வாகனங்களுக்கு சாலை வரி வசூலிப்பதால் டோல்கேட்கள் அகற்றப்பட வேண்டும் ஆர்டிஒ அலுவலகம் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை தனியார் கார்ப்பரேட்களிடம் தாரை வார்ப்பது தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை மேம்பாலத் திற்கு கீழ் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து மற்றும் சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத் தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜோதி,சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மரிய ஜான் ரோஸ், ஆட்டோ ஓட்டுனர் தொழிலா ளர் சங்க மாவட்ட பொதுச்செய லாளர் ஆர்.முருகன்,அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி அருண் ஆகியோர் பேசி னர்.சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் நிறைவுரையாற்றி னார். ஆட்டோ ஓட்டுனர் சங்க மாநில குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறி னார்.