tamilnadu

img

‘பாஜக எம்.பி.க்களால் நாடாளுமன்றம் பஜனை கூடமாகி வருகிறது’

திருநெல்வேலி, ஜன.11- நெல்லையில் பொருநை மக்கள் இயக்கம் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்புக் கருத்தரங்கம் வெள்ளிகிழமை மாலை நடைபெற்றது.  நெல்லை கொக்கிர குளம் ரோஸ் மஹாலில் நடை பெற்ற இந்த கருத்தரங்கிற்கு டாக்டர் எஸ்.ராமகுரு  தலைமை தாங்கினார்.  பேரா சிரியர் பொன்ராஜ் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர், இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.பாலபாரதி பேசியதாவது:  மத்திய பாஜக தலை மையிலான மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத் தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை நாம் அனை வரும் எதிர்க்க வேண்டும் பாஜக அடிக்கடி  கூறுகிறது. மிருக பலத்தோடு ஜெயித் தோம். இவர்களிடம் எப்படி மனித நேயத்தை எதிர்பார்க்க முடியும்?   கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்  அம்மாநில அரசு குடியு ரிமை சட்ட திருத்தத்தை செயல்படுத்த விடமாட்டோம் என அறிவிக்கும்போது தமிழக முதல்வர் மட்டும் ஏன் அதை எதிர்க்க மறுக்கி றார்? எனவே சட்டதிருத்தத் தை தமிழக அரசு எதிர்க்கும் வரை நாம் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி.க்கள்  அமரும்போது அது நாடாளுமன்றம் போல் இல்லை பஜனை கூடம் போல் உள்ளது. அவர்கள் மத்தியில் நமது எம்.பி.க்கள் சிங்கம் போல் கர்ஜிக்கி றார்கள். இவ்வாறு பேசி னார். எழுத்தாளர் இரா.நாறும் பூநாதன் நன்றி கூறினார். கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடை யப்பன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், காங்கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ,சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சி தலை வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.