tamilnadu

ஜூலை 3 நெல்லை-தென்காசியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூன் 27- திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொமுச தலைவர் தர்மன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், மாநி லக்குழு உறுப்பினர் பெருமாள், ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர். முருகன், சிஐடியு பாலகிருஷ்ணன், உலகநாதன் ஏஐடியுசி, சுப்பிரமணியம், தென்கரை மகாராஜன், ஆவூரான், எச்எம் எஸ் கஸ்பர்ராஜா ,ராமசாமி, ஐஎன்டியுசி கணேசன், ஏஐசிசிடியு சந்தானம், கல்யா ணசுந்தரம், டிடிஎஸ்எப் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பயன் படுத்தி மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக நீக்குவது, பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். ஆட்டோ, சாலை போக்குவரத்து தொழிலாளர் களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும். பீடி, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் நிவா ரண நிதியாக மாதம் ரூ.7,500 வழங்க வேண் டும். இந்த நிவாரண நிதி ஆறு மாதங்க ளுக்கு வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்திற்கு வேலை இல்லாத அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை ஜூலை 3ஆம் தேதி திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் மத்திய ,மாநில அரசு அலுவலகங்கள், போக்குவரத்து பணி மனைகள், மின்வாரிய பிரிவு அலுவல கங்கள், ஆட்டோ சாலைப்போக்குவரத்து ஸ்டாண்டுகள், தொழிற்சாலைகள் முன்பு மற்றும் மக்கள் கூடும் இடங்கள் உட்பட 600 பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.