திருநெல்வேலி:
வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், சி.பி.எம் நெல்லை தாலுகாசெயலாளர் எம்.சுடலைராஜ், பாளை தாலுகாசெயலாளர் பா.வரகுணன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் டி.காமராஜ், பொதுச்செயலாளர் ஜோதி, பொருளாளர் மணி, வாலிபர் சங்க கர்ணா, சுரேஷ், தொமுச மாநில அமைப்பு செயலாளர் அ.தர்மன், மகாவிஷ்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசிவிசுவநாதன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அம்பாசமுத்திரத்தில் இடதுசாரி விவசாயசங்கங்கள் மறியலில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு சுடலைமணி தலைமை தாங்கினார். சி.பி.எம் ஒன்றியசெயலாளர் ரவீந்திரன், சி.பி.ஐ. பரத்வாஜ், சி.பி.எம் ஜெகதீஸ் பேசினர். நெல்லை மற்றும்தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மொத்தம் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
காய்கறி மார்க்கெட் அண்ணா சிலை முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டதுணைத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து,மாவட்ட குழு உறுப்பினர் குமாரவேல், சிபிஎம்மாநகரச் செயலாளர் ராஜா, புறநகர் செயலாளர் ராஜா,மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்எஸ்.முத்து கலந்து கொண்டனர்.சாத்தான்குளம் காமராசர் சிலை முன்பு நடைபெற்ற மறியலுக்கு வட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சேசுமணி, கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சங்கரலிங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுந்தரகணபதி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டனர்.திருவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் சு.நம்பிராஜன் தலைமை தாங்கினார். விவசாய சங்க திருவை ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பொன்ராஜ், பொது தொழிலாளர் சங்கநிர்வாகி பெருமாள், சிஐடியு ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் சுவாமிதாஸ் வி.தொ.ச நிர்வாகி முருகன் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்திற்கு விளாத்திகுளம் தாலுகா செயலாளர் புவிராஜ் தலைமை வகித்தார். சிஐடியு கன்வீனர் ஜோதி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சுப்புராஜ், அழகுமுத்து, சௌந்திரபாண்டியன், காளிச்சாமி, தங்கராஜ் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் இராமசுப்பு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் இராஜேந்திரன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் சங்கிலிப்பாண்டி தாலுகா செயலாளர் லெனின், ஒன்றிய தலைவர் சங்கரன் பங்கேற்றனர். எட்டையபுரத்தில் தமிழ்நாடு விவசயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். எட்டையபுரம் தாலுகா செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓட்டப்பிடாரம் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆழ்வை போராட்டத்திற்கு தவிச மாவட்ட துணைத் தலைவர் த.சீனிவாசன் தலைமை வகித்தார். கயத்தாறில் தவிச மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆதிதமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் அருந்ததி அரசு, தமிழ் புலிகள் கட்சிமாவட்ட செயலாளர் தாஸ், செய்தி தொடர்பாளர் வேல்முருகன், கொள்கை பரப்பு செயலாளர் கத்தார் பாலு, ஆதித்தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் சுரேஷ் வேலன், திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் ரவிசங்கர், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித், தமிழர் விடுதலை கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தனராஜ், மாணவரணி செயலாளர் டேவிட், தமிழ மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜலால் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்தி பங்கேற்றனர்.
தென்காசி
போராட்டத்திற்கு சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.வேல்முருகன், எம்.தங்கம், தாலுகாசெயலாளர் அயூப்கான், முருகையா, ஜாகீர்உசேன், கந்தசாமி, கண்ணன், திருமலைக்குமார், ஆரியமுல்லை, கிருஷ்ணன், சங்கரி,ராமமூர்த்தி, ராமசாமி, ஆறுமுகம் நாரயணண்,கருப்பையா, ராதகிருஷ்ணன், சித்திக், முத்துலெட்சுமி, புஸ்பா, விவசாய சங்கம் சுடலைமுத்து, ரத்தினவேல், அருணாசலம், கணேசன்,முத்துசாமி ஜயப்பன் தேசிய விவசாய சங்கம்புன்னைவனம் கண்ணையா ரெங்கசாமி, தமிழகவிவசாயி சங்கம் முருகன் பங்கேற்றனர்.\
செங்கோட்டை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பரமசிவன்,தாலுகா செயலாளர், விவசாயிகள் சங்கம் செயலாளர் சுந்தர்ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில குழு உறுப்பினர் பி.வேலுமயில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.கற்பகம், தாலுகா செயலாளர் ஆயிஷா, தென்னை விவசாயிகள் சங்கம்மாவட்ட பொறுப்பாளர் மீராகனி, விவசாய தொழிலாளர் சங்கம் சின்னசாமி, முருகேஷ், வாலிபர் சங்கம் வெங்கடேஷ், ஆன்டோ மற்றும்சார்பில் விவசாய சங்கம் பொறுப்பாளர்கள் மாரியப்பன், பழனி, சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். சிவகிரியில் 3 பெண்கள் உட்பட 74 பேர் பங்கேற்று கைதாகினர். சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பொ.ஜெயராஜ், சிபிஐநகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிபிஎம் வாசு- ஒன்றியச் செயலாளர்இரா.நடராஜன், விச பொறுப்பாளர் மருதையா, விதொச ஒன்றியத் தலைவர் எம்.இராமசுப்பு, விதொச ஒன்றியச் செயலாளர் ப.சுப்பையா, மாதர்சங்க ஒன்றியச் செயலாளர் புஷ்பம். விவசாயிகள் சங்க நகரத்தலைவர் ராஜேந்திரன், சிபிஐநகரச் செயலாளர் கணேசன், வேல்சாமி விச,விதொச நகரச் செயலாளர் அருணாச்சலம், ஏஐடியூசி செயலாளர் வேல்முருகன் பங்கேற்றனர்.ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு அகிலஇந்திய விவசாயிகள் சங்க ஆலங்குளம் தாலுகா செயலாளர் வெற்றிவேல் தலைமையில் மறியல் நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டதுணைத் தலைவர் மு.ராமகிருஷ்ணன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துனைச் செயலாளர் ச.வேலாயுதம் தலைமைதாங்கினார். த.வி.ச கடையம் ஒன்றிய செயலாளர் இரா.முத்துராஜன், த.வி.ச ஒன்றிய தலைவர் சட்டநாதன் த.வி.ச வட்டாரத் தலைவர்முருகன், வட்டார தலைவர் பரமசிவன்கண்டன உரையாற்றினர். ஒன்றிய செயலாளர் மாடசாமிமுன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், வாலிபர் சங்கமாவட்ட தலைவர் மேனகா, மாதர் சங்க செயலாளர் நேசமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் இரா.கிறிஸ்டோபர்முன்னிலை வகித்தனர். அப்பாத்துரை. சதாம்உசேன்.வள்ளி. செந்தில்வேல். கணேசன், சீமான், முத்துவேல். ஹரிகரன், சங்கரன் செந்தில் சைலப்பன் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள்சங்க மாவட்ட செயலாளர் உ.முத்துபாண்டியன், சி.பி.ஐ வட்டார செயலாளர் குருசாமிதலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் அசோக்ராஜ்,த.வி.ச மாவட்ட துணை எம்.முருகன், பாலுசாமி, லட்சுமி, ரத்தினவேல், முருகன், தண்டபாணி, ஜெயந்தி, ராமசாமி கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்
கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக நிறைவேற்றியுள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், மஞ்சாலுமூடு ஆகிய 3 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வெள்ளியன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கைவிடக் கோரி முழக்கமிட்டு சாலைமறியலில் நூற்றக்கணக்கானோர் ஈடுபட்டனர்.நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன்,சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், வாலிபர் சங்கம் மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் பதில் சிங், மாதர் சங்கம் மாநில துணை செயலாளர் என்.உஷா பாசி ஆகியோர்பேசினர். சிபிஎம் மாநகர் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்த்தாண்டம் போராட்டத்திற்கு தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன்சைலஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், சிஐடியு மாநில நிர்வாகிஐடா ஹெலன், மாவட்ட தலைவர் சி.சிங்காரன், விதொச மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, சிபிஎம் வட்டார செயலாளர் வி.அனந்தசேகர் உள்ளிட்டோர் பேசினர்.அருமனை அருகே மஞ்ஞாலுமூடு போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டார தலைவர் பி.சசிகுமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் அருமனை வட்டார செயலாளர் சி.சசிகுமார் களியல் வட்டார செயலாளர் கோபாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்கமாவட்ட பொருளாளர் சதீஷ், எச்.இராஜதாஸ்,மங்கோடு ஊராட்சி தலைவர் இராஜன், வாலிபர் சங்க அருமனை வட்டாரத் தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர். போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.