திருநெல்வேலி, ஜூன் 15- நெல்லையில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லையில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் போன்ற உபகரணங்கள் வழங்க வேண்டும். பணி இல்லா நாட்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். ஓட்டுநர்-நடத்துநர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு அனைத்து பணபலன்களையும் உடன டியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் திங்கட்கிழமை வண்ணா ர்பேட்டை புறவழிச்சாலை பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஏஐடியுசி மத்திய சங்க துணைத் தலைவர் ஜெயக்கு மார் தலைமை வகித்தார். சிஐ டியு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ஜோதி, தொமுச ஐயப்பன் தஸ்தகீர் ஏஐடியுசி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.