மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல்ராஜ், சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஆர்.கருமலையான்,முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டதால் மறியல் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தோழர் அசோக்கின் உடல் அரசு மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டு ஊர்வலமாக கரையிருப்புக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக தோழர் அசோக்கின் உடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி மற்றும் வாலிபர் சங்க கொடி போர்த்தப்பட்டது.
தொடர்ந்து அசோக்கின் உடல் கரையிருப்பு சுடுகாட்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அங்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் வெங்கட்ராமன், வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகம்மது ரியாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,சி.ஐ.டி.யு அகிலஇந்திய துணை தலைவர் ஆர்.கருமலையான், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி,ஜெயராஜ், ஆர்.மோகன், துரைராஜ், ஸ்ரீராம், தாலுகா செயலாளர்கள் எம்.சுடலைராஜ்,பா.வரகுணன், சிஐடியு மாநில செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம், வாலிபர் சங்க மாநிலதலைவர் ரெஜீஸ்குமார், மாநில செயலாளர் பாலா,இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன்,மாணவர் சங்க மாவட்ட தலைவர் சத்யா, மாவட்ட செயலாளர் தினேஷ் ,வாலிபர் சங்க மாநில நிர்வாகி சிவராமன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மேனகா, மாவட்ட செயலாளர் பி.உச்சிமாகாளி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் பூ.கோபாலன், எவிடன்ஸ் கதிர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.