தூத்துக்குடி, டிச.31- தூத்துக்குடி முள்ளக்காடு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார்(40). இவர் 3 வயது பெண் குழந்தையை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாயார், தூத்துக்குடி அனை த்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, நந்தகுமாரை செய்து செய்தார். இதனைத் தொடர்ந்து வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.