tamilnadu

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடி ஆட்சியர் வலியுறுத்தல்

தூத்துக்குடி, அக்.6- மாணவர்கள் தண்ணீரை சேமிக்கவும் துணிப்பைகளைப் பயன்படுத்தவும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று தூத்துக் குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.  தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சமூக மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டு தோறும் ஐந்து கிரா மங்களைத் தத்தெடுத்து அங்குள்ள மகளிர் மற்றும் மாண வர்களுக்கு மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் பழையகாயல் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சூழல் மேம்பாட்டு முகாம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்ச்சியில் தூய மரியன்னை கல்லூரி பேராசிரியை அமோரா வரவேற்றார்.  தூய மரியன்னை கல்லூரி குழந்தை தெரஸ், உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் திட்டங்கள் பற்றிய அறி முகம் செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து பேசியதாவது: தண்ணீர் சேமிப்பும் பாரம்பரிய தண்ணீர் வளங்களான குளங்களை தூர்வாரும் நிகழ்வுகளும் இன்றைய இன்றியமை யாத தேவைகளாகும். சுற்று சூழலை பாதுகாக்க நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அனைவரும் மாற்று துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு ஆட்சியர் துணிப்பைகளை வழங்கினார்.