tamilnadu

தூத்துக்குடி- பெங்களூரு விமான சேவை  மீண்டும் துவக்கம்

தூத்துக்குடி, ஆக.8- தூத்துக்குடி- பெங்களூரு இடையே விமான சேவை சுமார் 4 மாதங்களுக்கு பிறகு சனியன்று முதல் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சுமார் 4 மாதங்களாக விமான சேவை நிறுத்தப் பட்டது. இந்நிலையில் பல்வேறு கட்டுப் பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவையை துவங்க மத்திய அரசு உத்தர விட்டது. இந்நிலையில்  தூத்துக்குடி- பெங்களூரு இடையே விமான சேவை சனியன்று தொடங்கியது. இதன்படி காலை 7.20 மணிக்கு 71 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து கிளம்பிய விமானம், தூத்துக்குடிக்கு காலை 8.35 மணிக்கு வந்தடைந்தது. அதே போல் 9 மணிக்கு 68 பயணிகளுடன் தூத்துக்குடியில் இருந்து பெங்களூ ருக்கு கிளம்பி சென்றது. முன்னதாக பய ணிகளுக்கு கொரோனா பாதுகாப்பு விதிக ளின் படி மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டது.

இதனை விமான நிலைய இயக்கு நர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மேலும் இன்டிகோ நிறுவனம் சார்பில் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக் கிழமை ஆகிய 3 நாட்களில் விமனங்கள் இயக்கப்பட இருக்கிறது. பெங்களூரு- தூத்துக்குடி விமானம் காலை 7.20-க்கு புறப்பட்டு 9 மணிக்கு தூத்துக்குடி வந்த டையும். அது போல் தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானம் காலை 9.20-க்கு புறப்பட்டு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கொரோனா காரணமாக மே மாதம் 26-ஆம் தேதி முதல் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு மட்டும் விமான போக்குவரத்து இயக் கப்பட்டு வந்த நிலையில் சனியன்று முதல் தூத்துக்குடி– பெங்களூர் இடையே விமான சேவை துவங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.