tamilnadu

img

சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி, ஜூன் 18- சிவகளை மற்றும் ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் நடை பெற்று வரும் அகழாய்வுப் பணி களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சிவகளை மற்றும் ஸ்ரீ வைகுண்டம் வட்டம் ஆதிச்சநல் லூர் ஆகிய இடங்களில் தொல்லி யல் துறையின் மூலம் நடை பெற்று வரும் அகழாய்வுப் பணி களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  புதனன்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு பணிகள் தொடர்பாக கேட்ட றிந்து, அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட பழமை யான பொருட்கள் சேகரித்து பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  செய்தியாளர்களி டம் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் துறையின் மூலம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இரண்டு  பழமை வாய்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டு ஆய்வு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு கண்டறியப் பட்டுள்ள பொருட்கள் 2,800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த பகுதிகளில்  பண் டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மற் றும் முதுமக்கள் தாழிகள் கிடைக் கின்றன. இந்த பகுதியில் தொல்லி யல் துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவுப் படி சிவகளை மற்றும் ஆதிச்ச நல்லூர் அகழாய்வு பணிகள் மேற் கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த ஒரு மாதமாக சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் அக ழாய்வு பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்த அகழாய்வுப் பணி களின்போது பண்டைய காலங்க ளில் பயன்படுத்திய பானைகள், புகை பிடிப்பதற்காக பயன்படுத் திய பைப், பழைய கற்கள், செம்பு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்ந்து கிடைக் கின்றன.

ஆதிச்சநல்லூர் பகுதி யில் சுமார் 115 ஏக்கர் பரப்பள வில் அகழாய்வுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இந்த பகுதியின் அரு கில் உள்ள இடங்களிலும் அக ழாய்வுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.  மாவட்டத்தில் உள்ள சிவ களை, ஆதிச்சநல்லூர் ஆகிய பகு திகளில் அகழாய்வு பணியின் போது பல்வேறு விதமான பொருட் கள் தொடர்ந்து கிடைத்து வரு வதால் நமது மாவட்டத்திற்கு இத னால் பெருமை சேர்க்கப்படு கிறது. இப்பணிகளை தொட ர்ந்து மேற்கொள்ள மாவட்ட நிர் வாகம் முழு ஒத்துழைப்பு அளிக் கும் என தெரிவித்தார்.