tamilnadu

மின்சாரத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கையெழுத்தியக்கம்

 தூத்துக்குடி, ஜூலை 20- மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளுக்கு வழங் கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இந்த திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் இந்த மசோதாவை கைவிட கோரியும் அகில இந்திய விவ சாயிகள் சார்பில் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், திமுக விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் எட்டயபுரத்தில் கையெழு த்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் நல்லையா தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார்.

தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது எனவும் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என கீதாஜீவன் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞரணி விநாயகா ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பா ளர் ராமர், திமுக ஒன்றிய செய லாளர் முருகேசன், தூத்துக் குடி மாநகர திமுக செயலா ளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.