தூத்துக்குடி, செப்.29- தரம் அறிந்துதான் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹெச்.வசந்தகுமார் தூத்துக்குடியில் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு கன்னியா குமரி எம்பி வசந்தகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகை யில், நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறு வார். கடந்த 8 ஆண்டுகளில் நாங்கு நேரி தொகுதியில் தாம் 95சதவீத மக்க ளுக்கான பணிகளை செயல்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டவர் எஞ்சியுள்ள 5சதவீத பணிகளை காங்கிரஸ் கட்சி யின் சார்பில் போட்டியிடும் ரூபா ஆர். மனோகர் செயல்படுத்துவார் என் றார். இத்தொகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தை மேம் படுத்த மத்திய மாநில அரசுகளுடைய உதவிகள் கூடுதலாகத் தேவை. அதற்கு தொடர்ந்து வலியுறுத்தப் படும். சாகர்மாலா திட்டத்திற்கு 1,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இடம் தேவை என்பதாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பு ஆயிரத்து 650 சதுர கிலோமீட்டர் என்பதனாலும் இந்த மாவட்டத்தில் சாகர்மாலா திட்டம் நிறைவேற்று வதற்கான சாத்தியக்கூறுகள் முற்றி லும் இல்லை. கடலுக்குள் கல்லைப் போடக் கூடாது மலைகளை உடைக்க கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறை கள் உள்ளதால் இந்த திட்டம் முற்றி லும் சாத்தியமில்லை எனக் குறிப் பிட்டார். பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருவது குறித்து கேட்டபோது, தரம் அறிந்துதான் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். எட்டுகோடி மக்க ளுக்கு பிரதிநிதி மேடையில் என்ன பேச வேண்டும் என்ற தரம் வேண்டும் என்றார்.