தூத்துக்குடி, ஏப்.20-தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்தகூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி-பசுபதி தம்பதியின் மகன் சக்திமாரியப்பன்(18). தற்போது பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இவர்,வெள்ளியன்று நண்பர்களோடு அதே பகுதி விஸ்வநாத நகர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றுக்கு புறா பிடிக்கச்சென்றுள்ளார். அப்போதுஎதிர்பாராமல் கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்துவிட்டார். தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு படையினர் அங்கு சென்று, சக்திமாரியப்பனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.