tamilnadu

தூத்துக்குடியில் பங்கு தந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி

தூத்துக்குடி, ஜூன் 21- கோவில்பட்டியில் கிறிஸ்தவ தேவாலய பங்கு தந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது சென்னை உட்பட வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருபவர்களால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் 179 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தை மற்றும் சென்னையிலிருந்து வந்த இருவர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை-தூத்துக்குடி இடையே 2 விமான சேவைகள் இயக்கப்படுகிறது. இதில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அதிகம் பேர் வருகின்றனர். 2 தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த பயணிகளை சோதனை செய்ததில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.