தூத்துக்குடி, ஜூன் 25- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்கு ளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தலைமை காவ லர்கள் முருகன், முத்துராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ கத்தை உலுக்கியுள்ள இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போரா ட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், புதனன்று இருவரது உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்து வமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதில் 3 மருத்துவர்கள் மற்றும் மாஜி ஸ்ட்ரேட் முன்னிலையில் நடந்த பரி சோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கை வெள்ளியன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டி யலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ஏற்க னவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிபி புதிய உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலியாக Non-Bailable பிரிவில் கைது செய்யப்படுபவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்ய க்கூடாது. டி.எஸ்.பி தலைமையிலான தடுப்பு க்காவல் மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்து அனைத்து காவல் நிலையங்களு க்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தக வல் வெளியாகி உள்ளது.