தேனி, மே 30- கேரள மாநிலம் புத்தடியில் சனிக் கிழமை நடைபெற இருந்த ஏலக்காய் மின்னனு ஏலத்தில் ஏல நிறுவனம், விவசாயிகள் ,வியாபாரிகளை தேனி ஆட்சியர் அனுமதிக்காததால் ஏலம் நடைபெறவில்லை .இதனால் தேனி மாவட்டத்தை சேர்ந்த 30 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நறுமண பொருள் வாரியம் ( ஸ்பைசஸ் போர்டு ) சார்பில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புத்தடியில் ஏலக்காய் வியாபாரிகள், விவசாயிகள், ஏற்று மதி நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று கேரள மின்துறை அமைச்சர் எம்.எம் .மணி தலையீட்டின் பேரில் இடுக்கி மாவட்டம் புத்தடியில் 28-ஆம் தேதி ஏலம் நடைபெற்று , 16 ஆயிரம் கிலோ மட்டுமே ஏலம் போனது.
அதிகபட்சமாக கிலோ விற்கு ரூ .2410 ஏலம் போனது. சரா சரியாக கிலோவிற்கு ரூ 1769 ஏலம் போனது .பொது முடக்கத்திற்கு முன் அதிக பட்சமாக ரூ 3,198 ,சராசரி யாக ரூ 2,359-க்கு ஏலம் போனது . ஸ்பைஸ் வாரியம் அட்ட வணைப்படி சனிக்கிழமை சி.ஜி.எப்.பி.எல் நிறுவனம் ஏலம் நடத்த அனுமதி வழங்கியது. அந்த நிறுவன ஊழியர்களுக்கு புத்தடி செல்ல தேனி மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. மேலும் விவசாயி களும் அங்கு சென்று ஏலக்காயை ஏல நிறுவனத்தில் பதிவு செய்ய முடியவில்லை. தமிழக வியாபாரி களை அனுமதிக்காத நிலையில் ஏலம் ரத்து செய்யப்பட்டது . கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பறிக்கப்பட்ட ஏலக்காய், காலம் கடந்து ஏல விற்பனை செய்யப் படுவதால் எடை, தரம் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் ஏல நிறுவனங்களில் வியாபரிகள் ஏலம் எடுத்து தரம் பிரித்து விற்பனை செய்வர் .இதன் மூலம் போடி, தேவாரம் ,கோம்பை ,பண்ணைப் புரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்க ளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த வேலையையையும் தேனி மாவட்ட ஆட்சியர் பறித்து விட்டார். கேரளாவிற்கு எல்லைப்பகு திகளிலிருந்து செல்லும் தோட்டத் தொழிலாளர்களை அனுமதிக்கா ததால் 20 ஆயிரம் தோட்டத் தொழி லாளர்கள், இரண்டாயிரம் ஜீப் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் தேனி ஆட்சியரின் நடவடிக்கையால் கேள்விக்குறியாகியுள்ளது.