tamilnadu

தேனி ,விருதுநகர்,திண்டுக்கல் முக்கிய செய்திகள்

ஒருவர் தற்கொலை
கடமலைக்குண்டு, ஜூன்16- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மந்திச்சுனை கிராமத்தை சேர்ந்த வர் மகாராஜன் (49). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவ திப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இத னால் மனமுடைந்த மகாராஜன் ஞாயி றன்று மதுபாத்தில் விஷம் கலந்து குடித் துள்ளார். அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகாராஜன் உயி ரிழந்தார். இதுதொடர்பாக கடமலைக் குண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடமலை-மயிலையில் தொடர் மின்தடை
கடமலைக்குண்டு, ஜூன் 15- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் பகல் நேரங்களில் மூன்று மணி நேரம் மின்சாரம் வெட்டப்படுகிறது. இதனால் மக்கள், சிறுகுழந்தைகள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும், மின்வாரியமும் தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உறு திப்படுத்த வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹோமியோ மருத்துவ முகாம்
விருதுநகர், ஜூன் 15- விருதுநகர் அருகே உள்ள சேர்வைக் காரன்பட்டியில் உலகப் புரட்சியாளர் சேகு வேராவின் பிறந்த தினத்தையொட்டி ஹோமியோ மருத்துவமுகாம் நடத்தப் பட்டது.   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விருதுநகர் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் சேகுவாரா பிறந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது.  இதையொட்டி, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்து இலவச மாக வழங்கப்பட்டது. நிகழ்வில் ஊரா ட்சி துணைத்தலைவர் மணிகண்டன், கிளைத் தலைவர் அழகர்சாமி, துணைத் தலைவர் அழகுராஜா, மாவட்டச் செயலா ளர் மீ.சிவராமன், ஊராட்சிமன்றத் தலை வர் விஜயா சின்னமருதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் முத்துவேலு மாவட்டக்குழு உறுப்பி னர் நல்லுச்சாமி, கிளைச் செயலாளர் ரெங்கநாதன், சொக்கநாதன், அழகு ராஜா, அ.அடைக்கலம், சங்கிலிமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மருந்து கள் உட்கொள்ளும் முறையை அக்கு பஞ்சர் மருத்துவர் சுமதி விளக்கினார்.

ஒருவர் கைது
திருவில்லிபுத்தூர், ஜூன் 16- திருவில்லிபுத்தூர் சர்ச் பாயிண்ட் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவரை திருவில்லிபுத்தூர் காவல்துறையினர் கைது செய்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பாம்பு பிடிப்பதில் சாதனை படைக்கும் திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர், ஜூன் 15- திருவில்லிபுத்தூரில் கடந்த மூன்று மாதத்தில் வீடுகளில் புகுந்த சுமார் 30 பாம்பு களை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை யினர் பிடித்து கண்மாய் பகுதியில் விட்டுள்ளனர். தீயணைப்பு வட்டாரங்கள் கூறுகையில், “நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, கண்ணாடி விரியன் ,கட்டுவிரியன் கருஞ்சாரை ,மஞ்சள் சாரை என சிறிதும் பெரிதுமாக பாம்புகள் பிடிபட்டுள்ளன. மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் 15-ஆம் தேதி வரை சுமார் 30 பாம்புகளை பிடித் துள்ளோம் என்றனர். தீயணைப்புத்துறை அலுவலர் கணேசன் அளித்துள்ள விளக் கத்தில் விருதுநகர் மாவட்டத்தில் திரு வில்லிபுத்தூரில் தான் அதிக பாம்புகள் பிடிபடுகின்றன. இதற்கடுத்த இடத்தில் இராஜபாளையம் உள்ளது என்றார்.

தவ்ஹீத் ஜமாத் போராட்டம்
திண்டுக்கல், ஜுன் 15- வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டெடுக்க மத்திய- மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வீடுகள் தோறும் இஸ்லாமி யர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் பேகம்பூர், முகமதியா புரம், பழனி, வத்தலகுண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே வீடுகளின் முன்பாக தனி நபர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.