tamilnadu

ஊரடங்கு காலத்தில் தனியார் மில்கள் செயல்பட அனுமதி அரசு வேலைக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்

தேனி, மே 25- தேனி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் தனியார் மில்கள் , வாகனகளுக்கு அனுமதி வழங்கிய தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், 10 ஆண்டுகளாக, வெளி மாநில தொழிலாளர்கள் நம்பியிருந்தும் நான்கு வழி சாலைக்கு அனுமதி வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் -குமுளி, மதுரை -போடி மெட்டு வரை யில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்  திண்டுக்கல் -குமுளி வரையிலான நான்கு வழிச்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்று வருகிறது. பல்வேறு கார ணங்களால் நின்று போன பணிகள் கடந்த 7 மாதமாக நடைபெற்று வரு கிறது.

வடுகபட்டி முதல் வீரபாண்டி வரை, பாளையம், கம்பம், கூடலூர்புறவழி சாலை களில் பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன. கொரோனா ஊர டங்குகாரணமாக இந்த பணி களும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிகளில் பெரும்பா லும்புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் பணியாற்றி வந்தனர். தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தேனி  ஆட்சியர் அனுமதி வழங்காத நிலையில் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் உண்ண உணவின்றி தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி, சிலர் குடும்பம் குடும்பமாக சென்றுவிட்டனர். முழு ஊரடங்கு நேரத்தில் வைகை அணைஅருகே இயங்கி வரும் பன்னாட்டு கம்பெனியான டாடா காபி இரவு பகல், நிரந்தர தொழிலாளியோடு, கூடுதல் தினக்கூலி தொழிலாளர்களை கொண்டு இயங்கியது. அதே போல ஏசிவி மில், ஏடிஏ மில், மேனகா மில்,  எல்.எஸ்.மில் போன்ற தனியார் மில்கள் இயங்கவும், அவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் செல்ல வும் அனுமதிசீட்டு கொடுத்து அவர்களை ஊக்குவித்தார் மாவட்ட ஆட்சியர்.

60 நாள் கொரோனா ஊரடங்கில் வயிற்று பிழைப்புக்கு டீ  விற்றநபர், சாலையோர பெண் வியா பாரிகள் எப்படியெல்லாம் கொடு மைப்படுத்தப் பட்டார்கள் என்பது நாடறிந்த விஷயம். ரயில் பணிக்கு அனுமதி கொ ரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மத்திய அரசு பல்வேறு தொழில்நிறுவனங்கள், அரசு ஒப்பந்த பணிகள் செயல்பட அனு மதி வழங்கியது. அதனைதொ டர்ந்து போடி - மதுரை அகல ரயில்பா தை திட்டப்பணிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் அதுவும் 10  ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்றுவரும் பணியினை மாவட்ட ஆட்சியரே முட்டுக்கட்டை போட்டு வருவது கடும் அதிருப்தியை ஏற்ப டுத்தியுள்ளது .இதனை நம்பியி ருக்கும் புலம் பெயர்ந்த தொழிலா ளர்களின் நிலையை மாவட்ட ஆட்சி யர் எண் ணிப்பார்க்க வேண்டும். சில வாரங்களில் பருவ மழை  துவங்கஉள்ள நிலையில்,  கூடுதலான பணியாட்கள்,எந்தி ரங்களை கொண்டு பணிகளை குறி த்தநேரத்தில் துவங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.