tamilnadu

img

நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: மேலும் 2 மாணவர்கள் ஜாமீன் கோரி மனு

தேனி:
நீட்தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டு சிறையில் உள்ள  மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தையரும் ஜாமீன் கேட்டு தேனி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.நீட்தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆரம்பத்தில் க.விலக்கு காவல்ஆய்வாளர் உஷாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.இதில் தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்படபலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்துஉதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் பிடிபட்டனர். விசாரணைக்குப் பிறகு இவர்கள் மதுரை சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் அளித்த விசாரணையின் அடிப்படையில் மாணவர்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போதுதேனி சிறையில் உள்ளனர்.மாணவர் உதித்சூர்யா, அவரதுதந்தை வெங்கடேசன் ஆகியோர் ஏற்கனவே ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் தேனி சிறையில் உள்ள இரண்டுமாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையும் ஜாமீன் கோரி நேற்று தேனி நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.நீதிபதி ஜி.ரூபனா இதற்கான விசாரணையை அக்டோபர் 10 அன்று நடத்த உத்தரவிட்டார்.இந்நிலையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு சேலம் நீதிமன்றத்தில்சரணடைந்த தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த  இர்பானை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான முயற்சியை சிபிசிஐடி.போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் வழக்கில் தொடர்புடைய இடைத்தர்கள் ரஷீத், வேதாசலம் ஆகியோரை பிடிப்பதற்கு சிபிசிஐடி காவல்துறையினர் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.