tamilnadu

img

அரசுப் பள்ளிக்கு நல உதவி

தஞ்சாவூர், மே16-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 160-க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் பிரச்சனை நிலவி வந்ததை அடுத்து தொழில் அதிபரும்,திமுக தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளருமான பழஞ்சூர் கே.செல்வம்சார்பில் ரூ.2 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறுஅமைப்பதற்கு முதல்கட்ட நிதி உதவி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை தலைமை ஆசிரியை மாலதியிடம் வழங்கப்பட்டது. பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் என்.கே.எஸ் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழகப்பொறுப்பாளர் ஏ.சாகுல்ஹமீது, தில்லைநாதன், ஜாகிர்,சைபுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.