தஞ்சாவூர், பிப்.29- குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, பெரிய நெசவுத்தெரு, தரகர் தெரு (ஆஷாத் நகர்) ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பிரமாண்ட எழுச்சிப் பேரணி, அதிராம்பட்டினத்தில் நடை பெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 10-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொ டர்ந்து நடைபெற்றது. போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற னர். போராட்டக்குழுவை சேர்ந்த வழக்குரைஞர் இசட். முகமது தம்பி கூறியது; இந்த சட்டம் திரும்பப் பெரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார். மேலும் தில்லி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட வர்களை கண்டிப்பதோடு, வன்முறை யில் பலியான 38 குடும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்து க்கு தஞ்சாவூர் மாநகர கிளை தலை வர் சையது முஸ்தபா தலைமை வகித்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்து க்கு, சுவாமிமலை கிளைத் தலைவர் ஜாபர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஹாஜாமைதீன் முன்னிலை வகித்தார். தஞ்சை நடுக் கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், முகமதுபந்தர் தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு, பேரா வூரணி கிளைத் தலைவர் பஷீர் அலி தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் கே.ராஜிக் முகமது முன்னிலை வகித்தார். அன்சர், அதிரை இலியாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராவூரணி சுன்னத் வல் ஜமாத் நிர்வாகிகள் முத்தலிப், ஹெச்.சம்சுதீன், டிஎன்டிஜே நிர்வாகிகள் முகமது இலியாஸ், பர்வேஸ், அயூப்கான், சேக் தாவூத், அனீபா, இப்ராஹிம்சா மற்றும் 300 பெண்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆர்.சாகுல் நன்றி கூறினார். வல்லம், திருக்காட்டுப்பள்ளி, ஒரத்த நாடு உள்பட மாவட்டத்தில் 21 இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.