தஞ்சாவூர், ஜூன் 3-அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், 32 ஆண்டுகாலம் அரசுப் பணியில் பணிபுரிந்தவர். ஜாக்டோ ஜியோ அமைப்பினை ஒருங்கிணைத்து போராடியவர். அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு, அரசு ஊழியர் ஓய்வு பெறும் நாளில்தற்காலிக பணி நீக்கம் செய்யக் கூடாது என்ற அரசு ஆணை, நீதிமன்றதீர்ப்பினை மீறி பணி ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு திங்களன்று மாலை கண்டனஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சை.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஆ.ரெங்கசாமி விளக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பி.இளையராஜா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் சார்லி தேவப்பிரியம், மாவட்டத் தலைவர் எம்.கலைச்செல்வன், ஊரகவளர்ச்சித்துறை நிர்வாகிகள் ராஜு, கை.கோவிந்தராஜு உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் கண்டனஉரையாற்றினர். நிறைவாக அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.கோதண்டபாணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.