தஞ்சாவூர், ஆக.9- புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆக.9 (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தன்று, நாடு முழு வதும் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த, சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமியை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, கட்சி அலுவலகத்தில் இருந்து காவ ல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தஞ்சை ரயிலடியில், சங்க மாவ ட்டத் தலைவர் பாலகுரு தலைமையில், சங்க த்தினர் புதிய கல்விக் கொள்கையை எதி ர்த்தும், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் அரவிந்தசாமியை விடுதலை செய்ய வலி யுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ ர்களை கைது செய்த காவல்துறையினர் தனி யார் திருமண மண்டபம் கொண்டு சென்ற னர். கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர்களை, சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தி ல்குமார், மாநகரச் செயலாளர் என்.குருசாமி மற்றும் கரிகாலன், அன்பு, ஜெய்பிரகாஷ் மற்றும் கட்சியினர் நேரில் சந்தித்து பேசி னர்.
சிபிஎம் கண்டனம்
காவல்துறையின் இச்செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டக்குழு சார்பில், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறுகையில், “போராட்டம் நடத்த ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்டி ருந்த போதிலும், போராட்டம் நடப்பதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவ டிக்கை என்ற பெயரில் காவல்துறை கைது செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அர விந்தசாமி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும், உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும்” என வலி யுறுத்தி உள்ளார்.