tamilnadu

img

அரசு ஊழியர் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13-ஆவது மாநில மாநாடு வரும் செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமை தஞ்சையில் மாவட்டத் துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 மாவட்ட இணைச் செயலாளர் ச.செல்வி வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் (பொ) ஆ.செல்வம் துவக்கவுரை யாற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், மாநில துணைத் தலை வர்கள் எஸ்.பார்த்தீபன், மொ.ஞானத்தம்பி, எம்.சுப்பிரமணியன், மாநிலச் செயலாளர்கள் சி.ஆர்.ராஜ்குமார், எம்.சௌந்தரராஜன், ஆ.பெரியசாமி, மாநில பொருளாளர் எம்.தங்கராஜ் உள்ளிட்டோர்.
நாகை மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம், திருச்சி மாவட்டச் செயலாளர் வளன் அரசு, அரிய லூர் மாவட்டத் தலைவர் பஞ்சாபகேசன், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.செல்வ ராஜ் மற்றும் பல்வேறு தோழமைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
மாநிலச் செயலாளர் இரா.பன்னீர் செல்வம் வரவேற்புக்குழு நிர்வாகிகளை முன்மொழிந்தார். கூட்டத்தில் அனைத்துஓய்வூதியர் சங்கங்களின் மாவட்டச் செய லாளர் இரா.தமிழ்மணி (வரவேற்புக்குழுத் தலைவர்), தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி (வரவேற்புக் குழு செயலாளர்), சா.கோதண்டபாணி (பொருளாளர்) உள்ளிட்ட 200 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. நிறைவாக மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சா.கோதண்டபாணி நன்றி கூறினார்.