தஞ்சாவூர், ஏப்.23- சமூக ஊடகங்களில் மதம், சாதி அமைப்புகள் மற்றும்தனிப்பட்ட நபர்கள்குறித்து தவறான அவதூறான பேச்சு,கருத்துக்கள், படங்கள், காட்சி, கருத்துப் பதிவுகள் ஆகியவற்றை உருவாக்கி பதிவேற்றுதல் சட்டப்படி குற்றமாகும். அப்படி பதிவிறக்கம் செய்து பார்த்து அதை மற்றவர்களுக்கு பரப்புதலும் இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் பிரிவு 67 தகவல் தொழில் நுட்பம் சட்டம் 2000-ன் படி குற்றமாகும். இந்த குற்றங்கள் ஜாமீனில் வர முடியாத குற்றங்களாகும். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட காட்சி பதிவுகள், கருத்துப் பதிவுகளைமற்றவர்களுக்கு பகிரும் போது, அது நீங்கள் தெரிவிக்கும் கருத்தாகவே சட்டத்தின் முன் கருதப்படும். எனவே சமூக ஊடகத்தை சரியான முறையில் பயன் படுத்தி மேற்கண்ட சமூக விரோத செயல்களை தடுக்கும்பொருட்டு காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.