tamilnadu

5,40,195 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் உணவுத்துறை அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், பிப்.12- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் உணவுத்துறை அமைச்சர் இரா.காம ராஜ், புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.  அப்போது விவசாயிகளிடம் உரியமுறை யில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என வும்,  கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு  24 மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய ப்படுகிறதா எனவும் கேட்டார். மேலும், நேரடி  நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி யிடம் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டை களின் அளவு குறித்து ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் உணவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 12  குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இக்குழுக்களின் ஆய்வு அறிக்கை குறித்து  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 389 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், திருவா ரூர் மாவட்டத்தில் 458 நேரடி நெல் கொள்மு தல் நிலையங்களும், நாகப்பட்டினம் மாவ ட்டத்தில் 498 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களும், பிற மாவட்டங்களில் 310 நேரடி  நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்க ப்பட்டு செயல்பட்டு வருகின்றன.  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 5,40,195 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சுமார் ஒரு லட்சம்  விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்க ளின் வங்கிக்கணக்கில் சுமார் 1,021 கோடி ரூபாய் மின்னணு பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இன்றி  விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயி களின் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்” என்றார்.