tamilnadu

img

தூர்வாரும் பணிகளை முறைகேடின்றி செயல்படுத்துக! தவிச வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 26- தூர்வாரும் பணிகளை முறை கேடின்றி செயல்படுத்த வேண்டும் என வேளாண்மைத் துறை செயலா ளரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.  சிறப்பு அதிகாரி ஆய்வு காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து தூர்வாரும் பணிகளை பார்வை யிட தமிழக அரசின் சிறப்பு அதிகாரி யாக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நியமிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் செவ் வாய்க்கிழமை அவர், தஞ்சை மாவட்டம் புளிச்சப்பட்டு, காட்டூர், வாளமர்கோட்டையில், ஒரத்தநாடு வட்டம் தென்னமநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.  அப்போது, தென்னமநாட்டில் அவரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நட ராஜன் நேரில் சந்தித்து, “கஜா புயலில் விழுந்த தேக்கு மரம், பாசன வாய்க் கால்கள், ஆறுகளில் இன்னும் அப்புறப்படுத்தாமல் கிடக்கின்றன.

அவற்றை பாசனத்திற்கு தண்ணீர் வருவதற்குள்ளாக அப்புறப்படுத்த வேண்டும். குடிமராமத்து பணி களை தண்ணீர் வருவதற்குள் முறை கேடின்றி, திட்ட அறிக்கையில் உள்ளவாறு வேலை சரியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.  முன்னதாக சில இடங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப்  பணிகள், திட்ட அறிக்கையில் உள்ளவாறு இல்லாமல், அளவை குறைத்து நடப்பது தெரியவந்து, வேலைகளை முறையாக செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று கண்காணிப்பு சிறப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி எச்சரித்தார்.  பின்னர் இதுகுறித்து ககன் தீப்சிங் பேடி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.58 கோடி மதிப்பில் 274 பணிகள் பொதுப்பணித்துறை மூலம் எடுக்கப்பட்டுள்ளன என்றார். ஆய்வின் போது ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.