கும்பகோணம், நவ.5- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட பாலக்கரை முதல் நீலத்தநல்லூர் வரையிலான சாலை கடந்த 2000-ஆம் ஆண்டு விஸ்தரிப்பிற்காக சாலை ஓரங்களில் குடி யிருந்த அன்றாடம் கூலி தொழில் செய்து வரும் விவசாயத் தொ ழிலாளர்கள் பத்து குடும்பங்க ளைச் வருவாய்த் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் அப்புறப்படுத்தப் பட்டது. அப்போது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கும்பகோணம் நீலத்தநல் லூர் சாலையில் அருகே உள்ள பறட்டை கிராமத்தில் குடிதண்ணீரோ, எவ்வித போக்குவரத்து சாலை வசதி யோ இல்லாத தீவு போன்ற மேல பரட்டை என்கிற இடத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் எவ்வித அடிப் படை வசதியும் இல்லாமல் சாலை ஓரத்தில் அப்புறப் படுத்தப்பட்ட முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 10 குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு செய்யப் பட்டது. அப்போது சாலை ஓரத்தில் குடியிருந்த மக்கள் செய்வதறியாது தங்களது சொந்த செலவில் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்ற னர். ஆனாலும் பத்து வரு டங்கள் ஆகியும் இதுவரை இலவசமாக கொடுத்த இடத்திற்கு குடிமனைப் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அரசு வழங்கும் தொ குப்பு வீடுகள் மற்றும் சாலை வசதிகளும் குடிதண்ணீர் மற்றும் இடுகாடு வசதி இல்லாமல் வயலை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மழை நேரங்களில் சேற்றிலும் சகதியிலும் இரவு நேரங்களில் வீட்டிற்கு செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வரு கிறார்கள் என வேதனை யுடன் தெரிவித்தனர். தகவ லறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தலைவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நாகரா ஜன் ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் விதொச ஒன்றிய தலைவர் நாகமுத்து வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ராமன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விபரம் கேட்டனர். அப்போது மிகவும் வேதனையுடன் அப்பகுதி மக்கள், ஓட்டுரிமை அடை யாள அட்டை எல்லாம் இருந்தும் நாங்கள் தீவுக ளில் வசிப்பது போல் சாலை வசதி இல்லாமல் குடி தண்ணீ ருக்கு மிகவும் அவதியுற்று நிலையில் இருந்து வருகி றோம் என தெரிவித்தனர். இது சம்பந்தமாக வருகிற நவம்பர் ஏழாம் தேதி சம் பந்தப்பட்ட உயர் அதிகாரி களை சந்தித்து உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்து வோம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தெரி வித்தனர். தேவைப்பட்டால் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.