tamilnadu

img

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை? நள்ளிரவில் ஆம்புலன்ஸில் காத்திருந்த நோயாளிகள்....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை பற்றாக் குறை ஏற்பட்டதால், ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் விடிய விடிய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32,903 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 27,637நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 4,891 நபர்கள் கொரோனாசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டுமே 28 பேர்உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் 1,250 உள்ள நிலையில் அனைத்தும் நிரம்பி விட்டதால், புதிதாகதொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும்நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், சனிக்கிழமை இரவுமுதல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் படுக்கைவசதி இல்லாத நிலையில், ஆம்புலன்ஸிலேயே விடிய, விடிய காத்திருந்தனர். அதன்பின்னர் படுக்கைகள் காலியான பிறகு (சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு) படுக்கைகள் கிடைப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கூறுகையில், 1,250 படுக்கைகளில், இன்னும் சில படுக்கைகள் காலியாக உள்ளது. தனியார் மருத்துவமனையில் இருந்துகடைசி நேரத்தில் நோயாளிகள் வருவதால்,அட்மிசன் போட சற்று தாமதாக ஆகி விடுகிறது. இதனால் தான் ஆம்புலன்ஸில் காத்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலைஉள்ளது என்றனர்.

                         ***************  

சடலத்தில் மொய்க்கும் எறும்புகள்

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை, உடற்கூராய்வு செய்து முறையான கவச உடைகள்இன்றி, துணியால் சுற்றி பிணவறையில் வைத்து விடுகின்றனர். இதனால், உடலில் எறும்புகளும், பூச்சிகளும் மொய்க்கும் அவலம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ளமின் தகனம் மேடையில், கொரோனாதொற்றால் இறந்த ஒருவரின் உடலைஉறவினர்கள் தகனம் செய்ய எடுத்துவந்த போது, அந்த உடல் முழுவதும்எறும்புகள் மொய்த்துக் கொண்டி
ருந்தால் அதிர்ச்சியடைந்தனர்.