நாகர்கோவில், ஜூன்.20- கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். இதில் கட்டுமான தொழிலில் பல்வேறு நிலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு அரசு நலவாரியம் மூலம் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணி க்கு பயன்படுத்தும் கையுறை, தலைக்கவசம் உள்ளிட்ட உபகர ணங்கள் சுமார் 1200 எண்ணிக் கையில் வழங்கியுள்ளது. இதனை மார்த்தாண்டத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் அலுவல கத்தில் அதிகாரிகள் தொழிற் சங்கங்கள் மூலம் தேவைப்படும் தொழிலாளர்களுக்கு விநியோ கித்தனர். ஆனால் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழிலா ளர் துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் மூலம் வழங்குவதற்கு பதிலாக நேரடி யாக தொழிலாளர்களை தொலை பேசி மூலம் தகவல் தெரிவித்த னர். இதனால் உபகரணங்கள் வந்த எண்ணிக்கைக்கு அதிக மாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப் பட்டனர்.
இந்நிலையில் அங்கு குவிந்த தொழிலாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிஐடியு கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் கட்டு மான தொழிலாளர்களுக்கான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். மேலும் நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் இந்த உபகரணங்களை வழங்குவதில் தன்னிச்சையாக செயல்படாமல், தொழிற்சங்கங்களுடன் இணை ந்து செயல்பட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு வழங்கும் உபகரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.