tamilnadu

கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை

தஞ்சாவூர் நவ.14- கஜா புயல் தாக்கி ஓராண்டு நிறை வடைந்த நிலையில் இதுவரை இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.  தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், தஞ்சை வருவாய் கோட்டாட்சிய ரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது:  “கஜா புயல் தாக்குதல் நிறைவடைந்து ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் தென்னை உள்ளிட்ட பாதிப்புக்கு இதுவரை பல ருக்கும் இழப்பீடு கிடைக்காத நிலைமை உள்ளது.  இது தொடர்பாக ஏற்கனவே பரிசீல னையில் உள்ள அனைவருக்கும் நிவாரணம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும், 2018- 19 ஆம் ஆண்டிற் கான பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டும், பூதலூர் கோவில்பத்து கிராமங்கள் மட்டும் விடுபட்டுள்ளது. ஏற்கனவே முறையிட்ட போது பெற்றுத் தரப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே விடுபட்ட மேற்கண்ட இரு கிராம விவசாயி களுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.