tamilnadu

கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு வழங்கல்

 தஞ்சாவூர், ஜூலை 18- ஆரோக்கியமான தாய், அதிக எடை உள்ள, அறிவு வளர்ச்சி நிறைந்த குழந்தை பிறப்பு வேண்டி, வீடு தேடிச் சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பசும்பால், நாட்டு வெல்லம், முட்டை மற்றும் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணி வட்டாரம் குறிச்சி சுகாதார நிலையத்தின் சார்பில் வலசக்காடு கிராமத்தில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தென்னை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க பொருளாளர் எஸ்.செல்வம், 6 ஏழை கர்ப்பிணி தாய்மார்களை தத்து எடுத்து அவர் களுக்கு பால், வெல்லம், முட்டை, காய்கறிகள், கீரை ஆகியவற்றை வழங்கினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ காலம் வரை, இந்த திட்ட பொருட்கள் கிராம சுகாதார செவிலியர் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் மாதந்தோறும் கர்ப்பிணி தாய்மார்களின் எடை மற்றும் ஹீமோகுளோபின் அளவு கண்காணித்து மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். மருத்துவ அலுவலர் பொன். அறிவானந்தம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் எஸ்.கண்ணன், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, பகுதி சுகாதார செவி லியர் தேவி, கிராம சுகாதார செவிலியர்கள் நூர்ஜஹான், தமிழ்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலை வர் இன்பராஜ் கலந்து கொண்டனர்.