தஞ்சாவூர், ஆக.8- தஞ்சாவூர் செயிண்ட் ஜான் பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2019-ம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற் கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடை பெற்றது. பயிற்சியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலிருந்து 170 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வியியல் கல்லூரியின் நிர்வாகி அருட்தந்தை டாக்டர் ஏ.ஸ்டீபன் ராஜ் தலைமை வகித் தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் மேரிகரோலின், மாவட்டத் தலைவர் நாராயணசாமி, மாவட்டச் செயலாளர் முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாநிலக் குழு பேரா.முனைவர் சுகுமாரன், பேராசி ரியர்கள் ராதா, மாரியப்பன், கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் இராம் மனோகர் ஆகியோர் பயிற்சியளித்த னர். பயிற்சியில் அரியலூர் மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமரன், மாவட்டத் துணைச் செயலாளர் க. தியாகராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆலோசகரும், ஐபிஇஏ பள்ளி தாளாளருமான பாலச்சந்திரன், கும்பகோணம் கிளைச் செயலாளர் செந்தில், துகிலி கிளைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட னர். அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.