tamilnadu

img

மக்கள் விரோத மத்திய பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், பிப்.17-  மக்கள், தொழிலாளர் விரோத மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சாமிக்கண்ணு, சிபிஐ ஒன்றிய செயலாளர் குமரப்பா, சிபிஐ எம்எல் மாவட்டக்குழு செல்லதுரை ஆகி யோர் தலைமை வகித்தனர். விவசாய சங்க பொறுப்பாளர் காசிநாதன், சிபிஐ கல்யாணசுந்தரம் கண்ணகி மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வி, சிபிஎம்  ராஜேந்திரன், நகரக் குழு உறுப்பினர் மலர்கொடி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.