தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில், கடந்த 1997-ஈம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.இதற்கான பணிகள் கடந்த 29-ஆம் தேதி தொடங்கின.இந்நிலையில் திங்கள்கிழமை, நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பாலாலயம் முடிந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான 8 கால யாகசாலை பூஜைகள் செய்ய, கோயில் வெளிப்புறத்தில் பெத்தண்ணன் கலையரங்கம் அருகே யாகசாலை அமைக்க பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறை, இந்திய தொல்லியல் துறை ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.கோயிலில் கும்பாபிஷேகம் முடியும் வரை பிரதோஷம், மகரசங்கராந்தி போன்ற விழாக்கள் நடைபெறாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.