கும்பகோணம், மே 28- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பகுதியில் மின்ன ழுத்த விநியோக குறைவினால் வீட்டு மின் சாதனங்கள் பழுதாகியும், அடிக்கடி மின் தடை யும் ஏற்படுகிறது. மேலும் இதனால் நூற்றுக் கணக்கான குத்துவிளக்கு பட்டறைகள் தொழிலாளர்களும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து தீக்கதிரில் மே 25 ஆம் தேதி செய்தி வெளியானது. இதன் தொடர்ச்சியாக திருவிடைமருதூர் ஒன்றியம் குழுக்கூட்டம் 27 ஆம் தேதி ஒன்றிய தலைவர் சுபா திரு நாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய ஆணை யர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட (16-வது வார்டு) நாச்சியார்கோவில் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழரசி குப்புசாமி, நாச்சியார் கோவிலில் சீரான மின்சாரம் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும் என ஒன்றியக்குழு தலைவரிடமும், வட்டார வளர்ச்சி மற்றும் மின்சார துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கப் பட்டது.