tamilnadu

பெயர்ந்து விழுந்த மத்திய கூட்டுறவு வங்கியின் முகப்பு

தஞ்சாவூர், ஆக.16- தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை பேராவூரணியில் கடைவீதியில் உள்ளது. இந்த வங்கிக்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்களும், ஆசிரியர்களும் வங்கிப் பணிகளுக்காக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் வங்கியின் முன்பக்கம் உள்ள சன்சேடு திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் அந்த பகுதியில் இல்லாததால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை மராமத்து செய்ய வேண்டுமென வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.