tamilnadu

img

உதடுகளில் ஏற்படும் பிளவுகள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு

தஞ்சை, டிச.14-  உதடு பிளவு, உதடு அண்ணப் பிளவு போன்றவைகளுக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய தனிப்பிரிவு செயல்படுகிறது. மேல் உதடு பிளவு என்பது மேல் தாடை எழும்புகள் மற்றும் உதடும் ஈறும் பிளவுபட்டிருக்கும். உதடு அண்ணப் பிளவு என்பது உள்வாயில் மேல்பகுதி பிளவுபட்ட நிலையில் காணப்படும். இத்தகைய உதடு மற்றும் உள் அன்னப்பிளவு போன்ற குறைபாடுகள் பெற்றோர்களின் மரப ணுக்களில் ஏற்படும் கோளாறுகளா லும், கர்ப்ப காலங்களில் தாயின் நலம் முறையாக பேணப்படாமல் இருப்ப தாலும், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் உடல்நலக் குறைகள் போன்ற காரணங்களாலும் இவ் வகையான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.   இதுபோன்ற பிளவுகளால் பிறக்கும் குழந்தைகள் சமுதாயத்தி னரால் ஒதுக்கப்படுதல், உணவுகளை உட்கொள்ளுவதில் ஏற்படும் சிரமங்க ளால் உடல் வளர்ச்சி பாதிக்கப்படு தல், சரியாகப் பேச முடியாதா நிலை, பள்ளிக்கு செல்ல வெட்கப்பட்டு படிப்பறிவு பாதிக்கப்படுதல், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் என சமு தாயத்தினரால் புறக்கணிக்கப்படு தல், காதில் சீழ்வடிதல், கேட்கும் திறன் குறையும் தன்மை, தாழ்வு மனப் பான்மை ஏற்படுவதால் தனிமையை விரும்புதல், வேலை மற்றும் திருமண வயதில் தடைகள் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  மேற்கண்ட உதடு மற்றும் அண்ணப்பிளவு பிரச்சனைகள் அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை செய்த பின்னர் முக அழகு மற்றும் உருவ அமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உணவு உட்கொள்வது மிகவும் எளிதாகிறது. முறையான பேச்சு பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலம் சரளமாக பேச முடியும். மனதில் தன்னம்பிக்கை ஏற் படக் கூடும். சமுதாயத்தில் இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.  உதடு மற்றும் உள் அண்ணப்பிள வை சரி செய்ய உலகத்தரம் வாய்ந்த தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 3 மாத குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 700 க்கும் மேற் பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப் பட்டுள்ளது.  உதடு மற்றும் உள் அண்ணப் பிளவு சிகிச்சைக்காக SMILE TRAIN என தனி மருத்துவப் பிரிவு மீனாட்சி மருத்துவமனையில் செயல்படு கிறது. மேலும் மருத்துவம் குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு அலைபேசி எண் 74026- 05593 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மருத்துவமனையின் சிறப்பு மருத்து வர் சவுமியா திரிபாதி கூறியுள்ளார்.