தஞ்சாவூர், மே 10- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் நிவாரணப் பொ ருட்கள் தாமதமாகவும், முழுமை யாகவும் வழங்கப்படவில்லை. எனவே அவற்றை முறைப்படுத்தி, அனைத்து பொருட்களையும், அரசு அறிவித்தபடி, குறை வின்றி, அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், ஒரே நாளில் வழங்கிட வேண்டும். இல்லையெ னில் ரேசன் கடைகளை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தெரிவித்திருந்தார். இதைதொடர்ந்து சனிக்கிழமை அன்று பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் கூட்டுறவு சார்பதி வாளர், தனித்துணை வட்டாட்சியர், பூதலூர் காவல் உதவி ஆய்வாளர், மனையேறிப்பட்டி கிடங்கு நகர்வு அலுவலகம் ந.பாஸ்கர், டி.தென்னர சன், அங்காடி விற்பனையாளர் ச. கோவிந்தராஜ், எம்.கார்த்திகேயன் ஆகியோர் அரசுத் தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.ராஜ், எம்.ஜி.சரவணன், ஜி.சார்லஸ், எஸ்.சதீஷ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், “பூதலூர் 1, 2, 3 மற்றும் கோவில்பத்து அங்காடிக ளில் பாதி குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. பூதலூர் வட்டத்தில் பெரும்பான்மை யான அங்காடிகளில் நகர்வு மெதுவாக நடைபெற்று வருகிறது. எனவே விரைந்து நகர்வு செய்து வழங்க வேண்டும்” என சிபிஎம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதில், பொருட்களின் ஒதுக் கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு ஆகிய வற்றை குடும்ப அட்டைதாரர்க ளுக்கு தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரும் மே 13 ஆம் தேதிக்குள் அனைத்து பொருட்க ளும் முழுமையாக நகர்வு செய்யப் படும். மேலும் கிடங்கிலிருந்து நகர்வு செய்யப்பட்ட பொருட்களை விற்பனை மையத்தில் பதிவேற்றம் செய்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
இது தொடர்பாக கிடங்கு தரக் கட்டுப்பாட்டு அலுவலரிடம், உடன டியாக விற்பனை முனையத்தில் விற்பனைக்கு ஏதுவாக மாற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டது. நடப்பு மாதத்தில் கடந்த மாதத்தை போலல்லாமல் இருப்பு சிறு சரி செய்தல் சிரமங்கள் உள்ளது. எனவே, மேற்படி குறைபாடுகள் சரி செய்து நான்கு நாட்களுக்குள் முழுமையாக நகர்வு செய்யப்படும்” என கூட்டுறவு சார்பதிவாளர் உறுதி யளித்தார். இதையடுத்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.