தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தம்பிக்கோட்டை மேலக்காடு ஊராட்சி மன்றம் 8 ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வேதமணி ஞானசேகரன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரது கணவர் கவிஞர் கே.ஆர்.ஞானசேகரன் இப்பகுதி தீக்கதிர் விநியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.