tamilnadu

நுகர்வோர் பாதுகாப்பு நிகழ்ச்சி

கும்பகோணம், ஏப்.2- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் சார்பாக நுகர்வோர்விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நுகர்ச்சி குறித்து விளக்கக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்லூரி முதல்வர் குருசாமி வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர்விழிப்புணர்வு குறித்த துண்டறிக்கையை வெளியிட்டனர். கல்லூரியின் தேர்வு நெறியாளர் குணசேகரன்”நுகர்வே வாழ்வல்ல வாழ்வதற்கே நுகர்வும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.பொருளியல் துறைத்தலைவர் ராஜேந்திரன் “இந்தியசந்தையும் நுகர்வும்” என்ற தலைப்பில் பேசினார். வழக்கறிஞர் ரம்யா நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார் வழக்கறிஞர் கீதா லயன், புகழேந்தி உள்படப் பலர் கலந்து கொண்டனர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தின்செயலர் சேதுராமன் வரவேற்றார் மாணவி பரணிகா நன்றியுரையாற்றினார்.