கும்பகோணம், மே 21- ஊரடங்கி கிடந்த மக்களை மறந்த மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் பாபநாசம் புதிய பேருந்து நிலையம், கோபுராஜபுரம், திருப்பாலை துறை, கபிஸ்தலம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் பி.எம்.காதர் உசேன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சேக் அலாவுதீன், முருகேசன், விஜயாள், கஸ்தூரி பாய், விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் விசுவநாதன், பாபநாசம் நகர செயலாளர் முரளிதரன், கபிஸ்தலம் கிளை செயலாளர் ரவி, ஜார்ஜ், செல்வ மேரி, விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் தங்கராசு, ஒன்றிய குழு உறுப்பினர்மணி வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.